Saturday, July 16, 2011

அவளுக்கொரு பாமாலை


July 1, 2011
1.தமிழ் இலக்கணம் தவறியது! 
'ம்என்பது மெய்யெழுத்தாம்!
எனக்கு உயிர் கொடுத்த உயிரெழுத்து அல்லவா அது?
 
2.பெண்ணே நான் உனைக் கண்ட வினையைத்தான்
விழித்தேன் என்றார்களோ?! விழியில் தேன்!
 
3. நீ ஆமென்றால் உண்மை இனிமை!
 இலை என்றால் உண்மை கடுமை!
உண்மையை இனிப்பாக்கு இனியவளே!
பி.கு: இந்த மூன்றில் ஒன்றுதான் என் முதல் காதல் கவிதை! எனக்கு பிடித்தது முதலில் இருக்கும் அந்தப் பா! ஏனென்றால் காதலில் வென்றவன் பா அது! இரண்டாவது மிக அழகான சிலேடை!
July 2, 2011

உனைக் கண்டு கூசுபவர்களுள் எவள் கண்டால் நீ கூசுகிறாயோ!       

அவளே இப்பாட்டுடைத் தலைவி!
 
சந்திரன் தூது சென்றது போதும்! சூரியனே இது உன் முறை!
 
நீ சென்று சொல் கதிரவனின் கோடை என்னை வாட்டவில்லை

அவள் கட்டிய  தனிமை கோட்டை தான் என்னை வாட்டியதென்று!

பி.கு: சுமார் 2:30A.M மணி அளவில் எழுதப்பட்ட கவிதை இது! சூரியனை வியந்து ஏதேனும் எழுத முற்பட்ட போது வந்து விழுந்த எண்ணம் காதல்! நிரஞ்சன் பாரதி இதை facebookஇல் like போட்டார்! பாரதியின் ரத்ததுக்கு பிடித்த கவிதை என்பதால் இதற்கு எப்போதும் என் நினைவில் தனி இடம் உண்டு.

July 16, 2011
1.காதல்! காதல்! காதல்!
  காதல் போயின்,
  இரண்டாம் காதல்! இரண்டாம் காதல்! இரண்டாம் காதல்!


2.மாதம் ஒரு முறை வருவது New moon day!
   தவறென்று சொல்லுங்கள்!
   அவள் பிறந்தநாள் மட்டும் தான் New moon day!

3. பூமிக்கும் நிலவுக்கும் இடையே சூரியந்தான் கிரகணமாம்!
    முட்டாள் விஞ்ஞானிகள்!
    எனக்கும் அவளுக்கும் இடையே அவள் அண்ணன்!
    அதுதானே கிரகணம்!


4. என் முகம் பார்க்க கண்ணாடி எதற்கு?
   அவள் முகம் போதுமே!
   அவள் சிரித்தால் நான் அழகாய் இருக்கிறேன்!

5. மறைந்திருக்கும் அழகுகள் –
    தென்னை ஒலையின் பின் நிலவு, பேஸ்பாக்கில் அவள் முகம்!

6. நிலவுக்கு செல்பவனுக்கும், அவளை காண்பவனுக்கும்
    ஒரே நிலை தான்
    மூச்சடைப்பு!

7. ஊடல் அமாவாசை, கூடல் பவுர்ணமி!
    இடைப்பட்ட காலமே வளர்பிறையும் தேய்பிறையும்.

8. ஒரு முறையாவது அவளை இரவில் கண்டுவிட வேண்டும்!
     இரவில் வானத்திலும் பகலில் வையத்திலும் உலாவுகிறாளோ?


9. யாரோ அவளது முகத்தை இன்று வானத்தில் மாட்டிவிட்டார்கள்!
    அவளைக்   காப்பாற்றுங்கள்!
    ஓ! இன்று பவுர்ணமியா??

10. இறைவனிடம் இருக்கும் நகல் இயந்திரம் அற்புதம்!
      பவுர்ணமி நிலவின் பிரகாசத்தை அப்படியே நகல் எடுத்திருக்கிறான்!

11. அவள் முகப்புத்தக ஆல்பத்தில்
      திடீரென கைக்குழந்தையுடன் சில புகைப்படங்கள்!
      உறவினர் குழந்தையாம் - மாரடைப்பு

பி.கு: இவை எழுதிய அன்று பவுர்ணமி! குரு பூர்ணிமா வேறு! முதல் நாள் அன்பர் ஒருவர் என் காதல் கவிதைகள் பற்றி பேசினார். எழுதிய அன்று வேறு அன்பர் டிவிட்டரில் காதல் கவிதை படிக்கவேண்டும் என்றார்! பெரும்பாலானவை நிலாவை ஒட்டியே வரும். நிலாவும் பெண்ணும் அழகுக்கு ஆதாராமாக ஆண்டாண்டு காலமாய் இருப்பவை!

Disclaimer: இவை எல்லாம் படித்த பின் யாரந்த பெண் என்று மட்டும் கேட்காதீர்கள்! ஒரு தலைவன் தலைவியைப் எண்ணி பாடியவை என்றே கொள்ளுங்கள்! ஏனெனில் நானும் அவளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

3 comments:

வாங்க பழகலாம்