Saturday, November 5, 2011

சென்னை 2013


12.05.2013
இரண்டு வருடங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்திலிருந்து சென்னைக்கு திரும்பும் நாள். அமெரிக்கா செவ்வாய் கிரகத்தில் கட்டி இருக்கும் தீம் பார்க்கில் ஜெயிண்ட் வீலில் உள்ள நட்டு போல்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கும் வேலை எனக்கு.
அங்கு 2ஜி 3ஜி எல்லாம் கிடையாது என்பதால் விண்கலத்தில் எந்திரன் பார்த்துக்கொண்டு வரும் போது கிடைத்த பழைய செய்தித்தாள்களில் 2ஜி வரை தெரிந்து கொண்டேன். செவ்வாய் கிரகத்தில் பூலோக செய்தியெல்லாம் கிடைப்பதில்லை.

சென்னை மீனம்பாக்கத்தில் வந்திங்குவேன் என எண்ணிய போது சென்னையில் அடிக்கும் கடுமையான புயலால் விமானம் பெங்களூரில் தரை இறங்கும் என்றார்கள். அட! பெங்களூர் பெங்களூருவாக மாறியிருக்கிறது, அடேடே! சிலபல அலைச்சல்களுக்கு பிறகு சென்னைக்கு செல்லும் ரயிலில் இடம் கிடைத்தது. அலுப்பில் கண்ணயர்ந்து, கனவில் சனி கிரகத்துக்கு போன போது யாரோ தட்டி எழுப்பினார்கள்! ”சென்னை வந்துடுச்சுப் பா” எந்திரி என்றார்கள்! உடைமை எல்லாம் பார்சலில் வருவதால் கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு சென்டரல் ரயில் நிலைய சிகப்பு கட்டிடத்தை பார்க்கும் ஆவலில் இறங்கினேன்.

மழையின் வீச்சில் ரயில் கண்ணாடி வழி சரியாக தெரியவில்லை! இறங்கிப் பார்த்தால் கட்டிடம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. “சே! விண்வளி பயண அலுப்பு இன்னும் தீரவில்லை. சிகப்பு கூட மஞ்சளாக தெரிகிறதே” என எண்ணிக் கொண்டே வெளிவந்தேன்.

சென்டரல் பழைய மாதிரி இல்லை! கட்டிடம் விட்டு வெளிவந்த போதுதான் தெரிந்தது அது சென்டரல் ரயில் நிலையமே இல்லையென்று! இதென்ன ஆச்சர்யம். ரயில் இப்போதெல்லாம் கோயம்பேட்டில் நிற்கிறது என்று வாய்பிளந்த போது மூக்கில் ஒரு நெடி ஏறியது.

இதென்ன ரயில் நிலையத்தில் மருத்துவமனையில் அடிக்கும் வாடை வருகிறதே! திரும்பினால் உண்மையிலேயே மருத்துவமனை. புரட்சி தலைவர் மருத்துவமனை வட்டம்: 145 கிளை: 219. பக்கத்தில் டாஸ்மாக்! நல்ல திட்டமாய் இருக்கிறதே, பெட்ரூமுக்கு அட்டாச்டு பாத்ரூம் போல டாஸ்மாக்குக்கு அட்டாச்ட் மருத்துவமனையா நல்லா இருக்கே!

ரயில் பாதையெல்லாம் கண்டபடி மாறி இருப்பதால் எதுக்கு வம்பென்று நினைத்து ஒரு மூன்று சக்கர தேரை வாடைக்கு எடுத்து ஏறி அமர்ந்தேன். மழை சற்று குறைந்திருந்தது.
தேரின் சாரதியிடம் பேச்சு கொடுக்க எத்தனிக்கும் விதமாக

“எப்பா! ரெண்டு வருசத்துல சென்னை பயங்கரமா மாறிடுச்சு” என்று அவன் காதில் பட்டும் படாமல் கூறினேன்.

“அட ஆமா பாசு. இன்னாங்கு தெருவுக்கு ஒரு ஆஸ்பத்திரி வந்துடுச்சு பாரு. எல்லாம் கவர்மெண்ட்டு ஆஸ்பித்திரி. கட்டடம் ஒவ்வொன்னும் சும்மா க்ளாசுல பளபளக்குது பாரு”

சென்ற முறை நான் பார்த்த அந்த மால் புரட்சி தலைவர் மருத்துவமனை வட்டம்:121 கிளை 15 என்ற பெயர்பலகையோட இருந்தது.

டூ மினிட்ஸ் நூடுல்ஸ் போல டூ இயர்ஸ் சுகாதார பூங்கா ஆகிவிட்டதா சென்னை என எண்ணி வியந்தேன்.

“பாரின்லேந்து வரமாதிரி இருக்கு. டிரையின்ல வர” என்றார் தேரோட்டி ஷெர்லாக் ஹோம்ஸ்.

”இந்த மழையால பெங்களூர்ல எறக்கிட்டாங்க. ஆமா மே மாசம் என்ன இப்படி மழை பெய்யுது?”

“நல்லாட்சி நடந்தா மாசம் மும்மாரி பெய்யுமாமே! அதான் மாமே” என சொல்லிவிட்டு சிரித்தார் மாணிக்கம் என நான் நினைத்த டி.ஆர்

”பாசு! மெட்ராசுல எல்லாம் மாறிடுச்சு. சென்டர்ல் டேசன் தான் பஸ் ஸ்டாண்டு, கோயம்பேடு தான் டேசன். மீனம்பாக்கத்துல தான் கப்பல் எல்லாம் நிக்குது. ஹார்பராண்ட ஏர்போர்ட் வந்துடுச்சு”

டமால். உலகமே தலைகீழாக கிடந்தது. ஏதோ ஒன்று பின் மண்டையில் தாக்கியது. எல்லாம் தலை கீழாக தெரிந்தது. சென்னை செய்திகளை கேட்ட அதிர்ச்சி அல்ல இது என மெதுவாக புரிந்தது. ஆட்டோ தலைகீழாக கிடந்தது.

பாஆஆஆம் என்று ஒரு இரைச்சல். ஒரு விமானம் மிக அருகே ஓடியது.சே . பறந்தது. ஏதோ ஒன்று.

என்னாயிற்று என புரியவில்லை.

“அய்யோ ப்ளேன் மோதி ஆட்டோ கவுந்துடுச்சு யாராவது வாங்க” என்று ஒரு யாரோ தூரத்தில் கத்துவது கேட்டது.

விபத்து ஒரு மனிதனை எப்படி எல்லாம் நிலைகுலையவைக்கிறது. விமானம் மோதி சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகுமா? ஏன் என் மூளை இப்படி எல்லாம் பைத்தியகரத்தனமாக சிந்திக்கிறது? அய்யோ என் தேரோட்டிக்கு என்னவாயிற்று? அவரும் என்னைப் போலவே கால் தலைக்கு மேல் கை முதுக்குப் பின் என எக்குத் தப்பான கோலத்தில் சுருண்டிருந்தார்.

ஒரு வழியாக ஆட்டோவை நிமர்த்தி என்னை வெளியில் எடுத்தார்கள், என் சாரதியையும் தான். அட உடனே ஒரு சைரன் சத்தம். ஆம்புலன்சகள் இவ்வளவு வேகமா? அதுவும் வாகன நெரிசலுக்கு பெயர் போன சென்னையிலா?

இதென்ன ஆம்புலன்சுக்கு முன்னால் கண்ணாடி இல்லையே! யாரோ மிதித்து வருவது போல இருக்கிறது. முதுகு திடீரென்று வலித்து இந்த கவனத்தை திசை திருப்பியது. கையில் வேறு சிராய்ப்பு. ஓட்டுனருக்கு காலில் நல்ல அடி. துடித்துக் கொண்டிருந்தார்.

உய்! உய் உய்! உய் உய் உய்!

சைரன் நெருங்கியது. என் கண்கள் என்னிடம் பொய்க்கவில்லை. அந்த சைரன் தாங்கிய வாகனத்தை ஒருவர் மிதித்து தான் வந்தார். அது ஒரு தட்டு வண்டி அதில் மெத்தை இட்டிருந்தார்கள். மழை ஓய்ந்தது. சேற்றில் கிடந்த எங்களை அப்படியே அள்ளி வண்டியில் போட்டார்கள்!

“இந்த ஜெட் ஏர்வேஸ்காரன் எப்பவும் இப்படிதான் ப்ளை ஓவர் வருதே மேல பறப்போம்னு எந்த அறிவும் கிடையாது. இந்த வாரத்துல இதே பாலத்துல இது மூனாவது ஆக்சிடண்ட். போன தபா அப்படியே ஆட்டோ ப்ளைட்டு ரெக்கையில மாட்டிகிச்சு. ஹைதராபாத்தாண்ட தான் கீழ உழுந்துச்சு” என்ற போது விபத்தின் போது வராத மயக்கம் இப்போது வந்தது.

முன்னர் கடந்து வந்த கட்டிடத்தில் தான் நான் படுத்து (புரண்டு) வந்த ஆம்புலன்ஸ் நின்றது. ஸ்டெர்க்சர் எடுத்துக்கொண்டு நான்கு பேர் ஓடி வந்தனர். எட்டி பார்த்தால் திகில் அதிகமானது. ஒரு சாக்குப் பையை நான்கு பேர் எடுத்துவந்தனர். அதை விரித்து அதில் என்னை தூக்கி போட்டனர். அதை அப்படியே லாவகமாக தூக்கி சென்றனர். இந்த விபத்தால் தூண்டிவிடப்பட்ட என் DNA தூலியில் நான் படுத்திருந்த ஞாபகத்தை வரவைத்தது.

ஒரு வழியாக ஒரு கட்டிலில் படுக்க வைத்தனர். இவ்வளவு நடந்தும் நான் என் கைப்பையை கீழே விட வில்லை. அதை டாக்டர் வாங்கி பக்கத்து ஸ்டூலில் வைத்தார். கையை ஒரு முறை தட்டிப்பார்த்தார். காலை கட்டிலில் இருந்து மூன்று அடிக்கு தூக்கி திடீரென்று விட்டார்.

“அய்யோ வலிக்குது”

“Fracture! அப்பவே நினைச்சேன்”

“டாக்டர். அந்த உயர்த்துல கால தூக்கி இரும்பு கட்டில்ல விட்டா உங்களுக்கும் வலிக்கும். கால்ல அடி படவே இல்லை! அது டிரைவருக்கு எனக்கு முதுகு தான் வலிக்குது.”

“ஓ! அந்த கஸ்டமர் இல்லையா நீங்க. அப்பவே டவுட் ஆனேன் ஆம்புலான்ஸ் டிரைவர் ஹிப் சைஸ் 32 சொன்னான் உங்க ஹிப் சைஸ் 29 தானே? அப்புறம் ஏன் 30 பேண்ட் போடுரிங்க? உங்க பாடி ஷேப்புக்கு சட்டை Slim fit போடுங்க. Allen solely 38 slim fit கரெக்டா இருக்கும்”

”டாக்டர் முதுகு வலிக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“அத விடுங்க! ஒரு Xray எடுத்து பாத்துடலாம். உங்க உடம்புக்கு Excalibur செட் ஆகாது. Peter England ட்ரைப் பண்ணுங்க”

“என்ன சொல்றிங்க டாக்டர். முதல்ல கை சிராய்ப்புக்கு டெர்ஸ் பண்ணுங்க”

“ஓ பண்ணிடலாமே! ஆனா ட்ரையல் ரூமில் இன்னொருத்தர் டெரஸ் ட்ரையல் பாத்துட்டு இருக்கார் வந்துடுடட்டும்.”

பக்கத்தில் இருந்த பேஷண்டை பார்த்து ”என்ன நடக்குது இங்க?” என்றேன்.
“ஊருக்கு புதுசா? அதான். ஆறு மாசம் முன்னாடி இது ஒரு ஷாப்பிங் மாலாய் இருந்துச்சு. போன ஆட்சியில கட்டிய கட்டிடம் என்பதால் ஆஸ்பத்திரியா மாத்திட்டாங்க. அங்க வேலை பாத்தவங்களுக்கும் மூணே மாசத்துல ட்ரெய்னிங் கொடுத்து டாக்டரா ஆக்கிட்டாங்க. அப்படி ஆனவங்க தான் இவிங்க. நீங்க தான் அந்த ப்ளைட் ஆக்சிடண்ட் கேசா? லுப்தான்சாவா? கிங் பிஷ்ரா?”

“ஜெட் ஏர்வேஸ்” ஈன குரலில் நான்.

“ஏம்பா அந்த பத்தாம் நம்பர் கஸ்டமரை xray எடுக்கனும் ட்ரையல் ரூமுக்கு கூட்டிட்டு வா” என்ற குரல் வந்த போது நான் முதுகு வலி கூட பாராமல் என் பையை எடுத்துக் கொண்டு வராண்டாவில் ஓடிக் கொண்டிருந்தேன்.

Disclaimer: என்னடா எதிர்கால புனைவு எழுதும் போதெல்லாம் இருநூறு இல்ல முன்னூறு வருடங்கள் தள்ளி தானே எழுதுவார்கள் இதென்ன இரண்டு வருடத்துக்கு பிறகென்று யாரும் குழம்ப வேண்டாம். இரண்டு நாட்கள் முன் வெளிவந்த செய்தியே இதற்கு காரணம். அந்தக் கொடுமை உங்களுக்கே தெரியுமே!



8 comments:

  1. கண்ணா எழுத்து பிழை திருத்தனும் , அப்புறம் கொஞ்சம் நடை வீச்சு அதிகம் படுத்து , பிரமாதமா வருவ

    ReplyDelete
  2. பட்டாசு பாஸ் ரொம்ப பிடிச்சிருந்தது நகைச்சுவை உணர்வு இயல்பாக வருகின்றது மெருகேற்றுங்கள் மேலும் :)

    by
    umakrishh

    ReplyDelete
  3. உண்மையில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குங்க. நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க. சிரித்தேன்!

    ReplyDelete
  4. நல்ல கற்பனை... :) நடந்தாலும் நடக்கும்...!

    ReplyDelete
  5. யார்யா இது இந்தப் பின்னு பின்றது?

    ReplyDelete
  6. ரொம்ப அருமையா இருக்கு . நல்ல கற்பனை .



    இணையத் தமிழன், விஜய்
    http://inaya-tamilan.blogspot.com

    ReplyDelete
  7. ரொம்ப அருமையா இருக்கு . நல்ல கற்பனை .

    ReplyDelete

வாங்க பழகலாம்