தமிழ் திரையிசைப் பாடல்களின் காலத்தில் வைரக்காலம் ஒன்று நடக்கிறது. ஒரு கவிஞனின் பேனா, மையில் இருந்து உணர்வுகளை வடிகட்டி இசையுடன் சேர்க்க கொடுத்து கொண்டிருக்கிறது. அந்தக் வைரம் மக்கள் கேள்விகளோடு உராசி பார்க்க முயன்றது Twitter தளத்தில். அதன் தொகுப்பே இந்தப் பதிவு.
@gpradeesh Pradeesh: தாங்கள் திரைத்துறையில் சாதிக்க இனிஎதுவும் இருப்பவதாய் தெரியவில்லை.முழுநேர தமிழ்,சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபடும் எண்ணம் உள்ளதா?
@siva_says siva subramani: இப்போதைய தமிழ் சினிமாவின் பாடல்கள் ரசிப்புத்திறனை மேம்படுத்தும் வண்ணம் உள்ளது என நினைக்கிறீர்களா?
@Nelofer8 Nelofer Shabhu: திருக்குறளை குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் கதை வடிவத்தில் எழுதும் யோசனை ஏதாவது இருக்கிறதா?
@sathishkalanith Sathish kalanithi: நீங்கள் உங்கள் முன்மாதிரியாக யாரை நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
@karthick_srt karthik: ஐயா நான் திரைப் பாடல் ஆசிரியன். சில பாடல்களும் எழுதியுள்ளேன். என் போன்றவர்க்கு சரியான திசைக் காட்ட ஏதாவது திட்டம் இருக்கிறதா?
@Nattu_G ஓலைக்கணக்கன்: @vairamuthu: "முகில் இனங்கள் அலைகிறதே” பாடல் வரிகளின் inspiration அல்லது behind the scenes அனுபவங்கள்?
@vairamuthu: சின்ன வயதில் பெளர்ணமியில் வெட்ட வெளியில் வான்பார்த்துப்படுத்திருந்த நாட்களில் தோன்றியது அந்தக் கற்பனை
@sureshbalakrish suresh: தங்களின் முதல் பாடலான “இது ஒரு பொன்மாலைப் பொழுது” வெளிவந்த போது தங்களின் மனம் எப்படி உணர்ந்தது?
@talapuli rakesh chandra சிறந்த பாடலாசிரியரான நீங்கள் ஏன் இன்னும் திரைப்படங்களில் வசனகர்த்தா ஆகவில்லை ..!
@vairamuthu: நட்பு - துளசி -அன்று பெய்த மழையில் - வண்ணக்கனவுகள் - என் வசனத்தில் வந்த படங்களே. இப்போது காலம் இல்லை வசனத்திற்கும் - எனக்கும்
@kanapraba kanapraba: திரையிசைக்கவிஞர் கடந்து வசனகர்த்தாவாகவும் நட்பு உள்ளிட்ட படங்களுக்குப் பணியாற்றியுள்ளீர்கள் அவை மன நிறைவை அளித்த அனுபவங்களா?
@NamVoice mcp.msr : உங்கள் எழுத்தில் வட்டார மொழி வழக்கு சிறப்பாக உள்ளது. நகரமயமாக்கலில் வட்டார மொழி வழக்கு சிதைந்து வருவதை தடுக்க என்ன செய்யலாம்
@vairamuthu: வட்டார வழக்குப் படைப்புகள் நிறைய வெளிவர வேண்டும்; மாவட்டச் சொல்லகராதிகள் தொகுக்கப்பட வேண்டும்
@santhu__92 santhosh: உங்கள் சமீப படைப்புகள் கள்ளிகாட்டு இதிகாசம் முதல் மூன்றாம் உலகப்போர் வரை உரைநடையில்,தண்ணீர்தேசம் போல் ஒரு படைப்பு மீண்டும் எப்பொழுது?
@Ntt_22 N.T.T: தற்போது வெளிவரும் பாடல்கள் இசைக்கு மடுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன கவி வரிகளுக்கு இல்லை இதைப் பற்றிய உங்கள் கருத்து ???
@Ilamkavi Vivek Prabu: படிக்கும் காலத்தில் மாணவர்கள் புத்தகம் வெளியிடுவது பற்றி விமர்சனம் எழுகின்றன,தங்கள் கருத்து?!
@RagavanG GiRa: என் பெயரே எனக்கு மறந்து போன வனாந்தரத்திலே :) இந்த இனிய கவிதையின் ஒலிவடிவத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடம் கிடைக்குமா?
@SIVATHENNARASU SIVATHENNARASU: கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது அவர் கையால் புத்தகம் வெளியிட்டீர்கள்.அதை ஏன் பொது இடத்தில் நடத்தமுடியவில்லை?உங்கள் பெருமைக்காகவா?
@valavan_t Thirumavalavan VR ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் ‘உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி’ என்று நீங்கள் பாட்டு எழுதி அவருக்கு உதவியிருப்பீர்கள்.
@jeevs1991 jeevitha antonthas வணக்கம். நானொரு ஈழ மகள்.இன்று உறவுகளை சொந்த மண்ணில் இழந்துவிட்டு, மலேசியாவில் அகதியாய்.எம் வலி ஆறுமா? அடிமை வாழ்வு தீருமா???
@vairamuthu: ஈழச்சகோதரிகயே! உன் வலிதான் என் வலியும். நீ நாட்டை இழந்தவள்;நான் ஊரை இழந்தவன். எந்த மண்ணில் விதைக்கப்பட்டாலும் வீரிய விதை முளைத்தே தீரும்.யாதும் ஊரே யாவரும் கேளிர்” வாழப் பழகு
@jeevs1991 jeevitha antonthas அடிமுடியாய் ஆண்ட மண்ணில் இன்னும் அடிமைகளாய் வாழும் எம் இரத்த உறவுகளின் நிலையை மாற்றியமைக்க இன்றைய இலக்கிய சினிமா உலகம் உதவுமா?
@arisuvadi bala: கலைஞருடன் உங்கள் நெருக்கத்துக்கான காரணம்? அவர் தமிழையை மதிப்பது போல எனக்குத் தோன்றவில்லை! தாங்கள் இந்த கேள்விக்கு விடையளிக்க மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கேட்கிறேன்! :-)
@vairamuthu: தமிழை மதிக்கும் கலைஞர் தமிழ்க்கவிஞர்களையும் பெரிதும் மதிக்கிறார்; நேசிக்கிறார். நட்போடு அரசியலைக் கலக்காதீர்கள். என்றும் எங்கள் நட்பு தொடரும்.
@bhoovi deepan chakravarthy: மூன்றாம் உலகப் போர் விவசாயத்தை காப்பாற்றுமா? எனக்கு இந்த உலகம் வெகு சீக்கிரத்தில் அழிவைக் காணப் போகிறது என்று தோன்றுகிறது!
@vairamuthu: விவசாயத்தைக் காப்பாற்றத்தான் மூன்றாம் உலகப்போர்! உலகம் வாழும்; நம்பிக்கையை வாழவிடுங்கள்.
@vairamuthu:: தொடக்கத்தில் பணம் புகழை நீங்கள் தேடிச் செல்ல வேண்டும்; பின்பு பணமும் புகழும் உங்களைத் தேடி வர வேண்டும்
@vairamuthu: படைத்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலகப் போர்; அதன் இறுதி அத்தியாயத்தில் கதறி அழுதுவிட்டேன்.
@drkandaraghav kandaswamy:கம்பனும்,வள்ளுவனும் மனப்பாடச் செய்யுளை விட்டு வெளியேறி,மனதிலும் வாழ்க்கையிலும் கலப்பது நிகழுமா?
@BsimpleBsample Anand: Hello sir,i am your great fan,Like to wish you for your quality lyrics with great thoughts,like to hear more & more from u :-))
@rohinitweetss Rohini Ramadoss: சொந்தஊரின் மீதான உங்கள் காதலின் வெளிப்பாடு தான்,கருவாச்சி காவியம்,மூன்றாம் உலகப்போர் " களம் தேனி மாவட்டம்..நான் சரியா???
@IncredibleMonke Incredible Monkey: 6 லட்சம் தமிழ் வார்தைகளில் உங்கள் உயிரில் கலந்த 5 தமிழ் வார்த்தைகளை வரிசை படுத்தி தர முடியுமா இப்போது?
@Sunradpm Sundar: ஐயா! கள்ளிகாட்டு இதிகாசம் , கருவாச்சி காவியம் போன்று மீண்டும் ஒரு உயிர் மிக்க படைப்பை எப்போது தருவீர்கள்?
@vairamuthu: தமிழும் சமஸ்கிருதமும் இந்திய நாகரிகத்தின் இரு கண்கள்; கண்களில் எது சிறந்தது ? எது தாழ்ந்தது?
@vairamuthu: கண்கள் மூடுங்கள்; உங்கள் எண்ணங்களை நெற்றிப் பொட்டில் நிறுத்துங்கள்; உங்கள் உடல் பெயர் தொழில் மறந்துவிடுங்கள் அமைதி அமைதி என்று உச்சரியுங்கள்.
Nice Work :)
ReplyDeleteThanks u done a great work.. by @gundubulb (Twitter)
ReplyDeleteGood job friend. Thanks!
ReplyDeleteThanks.....
ReplyDeletei am @kaadhalkaadhal
thanks for post my tweet to. felt super excited.
nice collection.. cute job :-)
ReplyDelete