Wednesday, July 27, 2011

பிரளயம்


பிரளயம் – எல்லா மதமும் வேறு பெயர்களில் ஆனால் ஒரு நாள் நிச்சயம் நடக்கும் என சொல்கிறது! நீங்கள் அனைவரும் அஞ்சும் வகையில் இது ஒரு கருத்தாழமிக்க மரணத்தை பற்றிய பதிவோ, மதங்களை பற்றிய பதிவோ அல்ல! 

மறுபடி நகைச்சுவை முயற்சி. 

களம் இதுதான்! நமது விஞ்ஞான அறிவால் பிரளயம் இன்று இரவு தான் என்று கணித்து விட்டோம். வெவ்வேறு துறைகளில் உள்ள மனிதர்களின் மனநிலை! அவ்வளவே!

அரசியல்வாதி: அப்போ இனிமே தேர்தல் எல்லாம் நடக்காதா?

குடும்பத் தலைவன்: அப்பாடா! Credit card bill, Loan EMI எதுவுமே கட்டவேணாம்.

குடும்பத் தலைவி: போன வாரமே அந்த பிஸிபேளாபாத்த சமைச்சு பாத்திருக்கலாம்.

நடிகன்: சே! என் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மலராதா?

நடிகை: செத்து போன பின்னாடி Make-Up எல்லாம் கலைந்து விடுமா??

கல்லூரி மாணவன்(வி): அந்த thesis எழுதியிருக்கவே வேண்டாம்!

யுவன்: இன்னிக்கு சாயந்திரம் நம்ம ஆளு கூட ஓடி போயிடலாமா?

யுவதி: அய்யோ! அந்த சிவப்பு நிற டாப்ஸ் வாங்க நாளைக்கு போகலாம் நினைச்சது தப்பா போச்சே!

மேனஜர்: இந்த PMS Meeting இன்னிக்கே வைச்சுருந்திருக்கலாம்.

HR: அப்படினா எல்லாருமே Notice Period கொடுக்கம போயிடுவாங்களோ?

மென்பொருள் கட்டுமானர்: Cant I fix the bug and stop the execution of apocalypse?

ஒபாமா: அட நான் இந்த ரஷ்யா போயிட்டு வரலாம்னு பாத்தேன்! அதுக்குள்ளயா??

CEO: இந்த காலாண்டுதான் நல்ல லாபம் காமிக்கலாம் என்று இருந்தேன்! :(

இயக்குனர்: அப்ப எனக்கு தேசிய விருது????

எழுத்தாளர்: இன்னிக்கு தான் புது புத்தகம் வெளியிட்டேன்! வரலாறு படைக்குமுன் என் வரலாறு முடிந்து விட்டதே!

Financier: அப்ப யாரு என்னோட வட்டி எல்லாம் வாங்குவா??

தணிக்கையாளர்: அய்யோ ITRக்கு இன்னும் acknowledgement வாங்கவே இல்லையே!

வக்கீல் : இன்னிக்கு தோத்த கேசுக்கு பேசாம வாய்தாவே வாங்கி இருக்கலாம்.

மருத்துவர்: நாலாவது வார்டு நோயாளி என் கிட்ட இருந்து தப்பிச்சப்பவே நினைச்சேன் இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று!

முதியவர்: நம்ம பையனுக்கு போன் பண்ணுமா!

முதிய பெண்: யாரும் வீட்டுக்கு வெளிய போகிதிங்க கண்ணுங்களா!

பதிவர்: அட! அழிவும் அமைதியும் தலைப்புல ஒரு பதிவு எழுதிடனும்! எங்கே laptop

Facebook Addict: Update the status as “Dead”

Disclaimer: இதில் கடைசி கற்பனை மட்டும் என்னுடையது அல்ல! எங்கோ குறுஞ்செய்தியில் படித்த நினைவு!

2 comments:

வாங்க பழகலாம்