Friday, July 15, 2011

மரணமில்லா பெருவாழ்வு

Disclaimer: இந்த பதிவில் நான் பகிரப்போவது சற்று செயற்கையான செய்தியாகத் தெரியலாம்! நான் மெத்தப் படித்தவனல்ல. இதை ஏற்கனவே யாராவது சிந்தித்து எழுதி இருந்திருக்கலாம்! இது இயற்பியலும், சக்தியும், மரணமும் இணைவது பற்றியது! பலருக்கு இது பழகியதாக இருக்கலாம்! சிலரின் சிந்தைக்கு பிடிக்காத ஒரு செய்தியாக இருக்கலாம்! ஆயின் ஒன்று உறுதி Logic தவறாது! முடிந்தவரை அலுப்பில்லாமல் இருக்கும் வகையில் எழுத முயற்சி செய்திருக்கிறேன்! அது எந்த அளவு வெற்றி என்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.

Law of conservation of energy states “Energy can neither be created nor be destroyed but can be converted from one form to another”.

இயற்பியல்! நான் தவறவிட்ட மற்றொரு வரம்! என்னை தவிர்த்த மற்றொரு காதலி! அவள் என்னை சுற்றி வந்த போதெல்லாம் தேர்வு, மதிப்பெண் என்று நான் மிகச்சிறிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்தேன். இப்போது பணம், PMS என்று அதை விட சிறிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.

மேற்கூறிய அந்த இயற்பியல் விதியயை நாம் அனைவரும் வாழ்வில் ஏதாவதொரு தருணத்தில் கடந்து வந்திருப்போம்! அப்படி இன்று வரை கடந்து வராதவர்கள் இந்த பதிவைப் படிக்க தொடங்கிய போதாவது படித்திருப்பீர்கள்.

மரணம்! நம் ஐம்புலன்களும் அடங்கிய அழகிய நிலை (தட்டச்சு தவறல்ல ’ழ’கரம்தான் ‘ழு’கரமல்ல)! நாம் நினைத்த நேரத்தில் வராமல் அவள் நினைத்த நேரத்தில் வரும் திமிர் பிடித்த காதலி இவள்! இவளை மணப்பது உறுதி! ஆனால் பலர் இந்த திருமணத்தை பொருத்தவரை பிரம்மசாரியாகவோ (சிரஞ்சீவியாகவோ), கன்னியாகவோ இருக்கவே விரும்புகிறார்கள்!

மரணம் – பொருள் கூறுக (1 மதிப்பெண்)

விடை: உயிர் உடலை விட்டு விலகுதல்

பி.கு: உயிர் என்பது ஒரு சக்தி (energy) என்பதை ஒத்துக்கொள்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். ஏனையோர் gnr.0404@gmail.com என்ற முகவரிக்கு ”நீ ஒரு முட்டாள்” என மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும் (ஒரு கணக்கு வேணுமில்ல).

இந்த சக்தியில்தான் மரணமும் இயற்பியலும் சங்கமிக்கிறது.

ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்! ஒரு நாளைக்கு 100 பாக்கெட்டுகள் சிப்ஸ் தயாரிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! ஐந்து வருடங்களுக்கு பின் அது இறந்து விடுகிறது. அதாவது scrap செய்து விடுகிறார்கள்! தனது வாழ்நாளில் 401,700 பாக்கெட்டுகள் தயார் செய்கிறது! அது தயாரித்த ஒவ்வொரு சிப்ஸிலும் அதன் சக்தி பகிரப்பட்டிருக்கிறது! அதற்கே வேறு சில சக்திகள் கூட பயன்பட்டு இருக்கின்றது! தண்ணீரின் சக்தி, மின்சார சக்தி, எண்ணையின் சக்தி! இவை எல்லாம் சேர்ந்து சிப்ஸின் சக்தியாக மாறி இருக்கின்றன.

ஆக இந்த இயந்திரத்தின் சக்தி தற்போது சிப்ஸின் சக்தியாக உருமாற்றம் அடைந்திருக்கிறது! எனவே அந்த சிப்ஸை உண்ட பின் அதனால் கிடைக்கும் சக்தியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அந்த சக்தி பகிரப்படுகிறது. அந்த இயந்திரத்தின் இயக்கம் நின்று விட்டது ஆயினும் அதன் மூலமாக மாறிய சக்தி இந்த உலகில் ஏதாவதொரு உருவில் உழன்று கொண்டுதான் இருக்கிறது.

நிற்க! மேல் சொன்ன கருத்தை ஒத்துக்கொள்பவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும். ஏனையோர் gnr.0404@gmail.com என்ற முகவரிக்கு ”நீ ஒரு அடிமுட்டாள்” என மின்னஞ்சல் அனுப்பி வைக்கவும் (இரண்டு கணக்குகள் வேணுமில்ல).

ஆத்மா! இந்த சொல்லை தயவு செய்து அடுத்த சில நிமிடங்களுக்கு மறந்துவிடவும்! ஏனெனில் இந்தப் பதிவில் மனிதனையும் ஒரு எந்திரமாகவே பதிவு செய்ய முற்பட்டுள்ளேன்! எப்படி அந்த சிப்ஸ் தயாரிக்கும் எந்திரம் சிப்ஸை தயார் செய்கிறதோ அதே போல்தான் நாமும் உணர்வுகளை தயார் செய்கிறோம்!

விண்ணைத்தாண்டி வருவாயா பார்க்கும் போது சிருங்காரமுமாய், வடிவேலுவை பார்க்கும் போது ஹாஸ்யமுமாய், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைப் பார்க்கும் போது வீரமுமாய், வஸந்தின் மாயா மாயா பார்க்கும் போது அற்புதமுமாய், மெகா தொடர்களை பார்க்கும் போது அருவெருப்புமாய், நுனி நாக்கு நிகழ்ச்சி தொகுப்பாளினகள் தமிழைக் குலைக்கும் போது கோபமுமாய், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருக்கும் தெருநாயைத் தாண்டும் போது பயமுமாய், சிரிக்கும் மழலைக் காணும் போது கருணையுமாய், தாயுடன் இருக்கும் போது சாந்தமுமாய் நம் உணர்வுகளை, உணர்வின் அதிர்வுகளை, மனித இயந்திரத்தின் சக்தியை வேறொரு உருவிற்கு மாற்றம் செய்கிறோம்!

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சக்தியாக உருமாறிக் கொண்டே இருக்கிறது! அப்படி இருக்க சக்தியை எவ்வாறு அழிக்க இயலும். Energy cannot be destroyed. ஆதலின் நம்முடைய சக்தி என்பது அழிக்க இயலாதது!
எப்படி அந்த இயந்திரத்தின் இயக்கம் நின்ற பின்னும் அதன் சக்தியான சிப்ஸ் இந்த உலகத்தில் வேறொரு சக்தியாக மாறி மற்றொரு சக்தியுடன் சேர்ந்து பல பரிமாணங்களை அடைகிறதோ, அதே நிலைதான் மனித இயந்திரத்துக்கும் நேருகிறது!

நான் எந்த சக்தியை இயக்கத்தில் இருக்கும் வரை உருமாற்றி உலகிர்க்கு தருகிறனோ நான் அந்த சக்தியாகத்தான் இவ்வுலகில் இருப்பேன்! நான் வெறுப்பையே அதிகமாக வெளிபடுத்தி இருப்பின் என்னைக் கடந்து வந்தவர்கள் அனைவரும் அதே உணர்வை வெளிப்படுத்துவர்! அவர்களால் பாதிக்கப்படுபவர் அவரைக் கடந்து வரும் போது கோபம் என்ற உணர்வே வெளிப்படும்! 

ஆகவே நான் இந்த உலகில் வெறுப்பு என்ற உணர்வாகவே நிலைபெற்று விடுவேன்! எனது இயக்கம் நின்ற பிறகு என்னால் அதை மாற்றவும் இயலாது! எப்படி சிப்ஸ் இயந்திரம் உருளை கிழங்கை வைத்து தக்காளி சாறு தயாரிக்க இயலாதோ அது போல் நம்மால் வெறுப்பு என்ற கிழங்கை வைத்து மகிழ்ச்சி என்ற சாறை தயாரிக்க இயலாது!

அதுவே நான் அன்பை பெரிதும் வெளிபடுத்தி இருந்திருந்தால், அன்பின் சக்தியாக, கருணையின் சக்தியாக, நிம்மதியின் சக்தியாக, சாந்தத்தின் சக்தியாக, ஹாஸ்யத்தின் சக்தியாக இந்த உலகில் நிலை பெற்று விடுவேன்.

இயந்திரம் நம்மிடம் உள்ளது, அதனை இயக்கும் சக்தியும் நம்மிடம் உள்ளது! நாம் செய்ய வேண்டியது அதன் (நம்) மூலமாக ஒரு சக்தியயை மாற்றி கொடுப்பதுதான்!

நான் உருவாக்கும் சக்தி வெறுப்பாக இருப்பின், அது அடையும் சக்தியும் வெறுப்பாகவே இருக்கும்! இயந்திர இயக்கம் நின்ற பிறகும், என் மரணத்துக்கு பிறகும் நான் என்னுடைய வெறுப்பாகவே இவ்வுலகில் மரணமின்றி சிறுமையான வாழ்வு வாழ்ந்துக் கொண்டே இருப்பேன்.

நான் உருவாக்கும் சக்தி அன்பாக இருப்பின், அது அடையும், அணையும் சக்தியும் அன்பாகவே இருக்கும். அது பரவும் பரப்பும் சக்தியும் அன்பாகவே இருக்கும்! இயந்திர இயக்கம் நின்ற பிறகும், என் மரணத்துக்கு பிறகும் நான் என்னுடைய அன்பாகவே இவ்வுலகில் மரணமின்றி பெருமையான வாழ்வு வாழ்ந்து கொண்டே இருப்பேன்.


5 comments:

  1. அட அடுத்த நித்தியானந்தா...!!

    ReplyDelete
  2. Good......!

    It seems that u r started with Law of conservation of energy and traveled in CHAOS theory...... Both can be handshaked...

    ReplyDelete
  3. @David: இப்பதான் கடை போட்டிருக்கேன்! அதுக்குள்ள கடைய கட்டனுமா??
    @Arun: thx da

    ReplyDelete
  4. In aathma paragraph u missed out dhayavu seidhu and in the last paragraph, it should have been adhu paravum parappin sakthiyum da. good one! liked this.

    ReplyDelete
  5. @Sup: First one corrected, second one i tried to use two verbs in the same phrase! pl look at the previous phrase! அடையும், அணையும் அதே போல் தான் பரவும் பரப்பும்! :)

    ReplyDelete

வாங்க பழகலாம்