தில்லு முல்லு படம் பாத்து சிரிக்காதவன் எல்லாம் ராஜ்பக்சேனு (அதான் அரக்கன்) தைரியமா சொல்லலாம்! அப்படிப் பட்ட திரைக்காவியம் அது! ஆள் மாறட்டமென்றால் இரு வேட கதாநாயகர்கள் மட்டுமே உழன்று கொண்டிருந்த தமிழ் திரையுலகின் வரைமுறையை உடைத்து எறிந்த திரைப்படம்!
அது எல்லாம் சரி அதுக்கு என்ன இப்போ? என்று கேட்பவர்கள் இந்தப் பதிவை படியுங்கள்!
நாள் 16, ஜூலை 2011 நாள்: சனிக்கிழமை
பள்ளித்தோழர்களின் சந்திப்பு ஒரு தி.நகர் உணவகத்தில். அதில் ஒருவருக்கு பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தபடியால் அவர் விருந்து அளிப்பதாக வேறு நிகழ்ச்சி ஒரு வாரம் முன்பே நிச்சயத்தாகிவிட்டது! 12B பேருந்தைக் கூட தவறவிடலாம் ஆனால் என்னால் இந்த நிகழ்ச்சியை தவறவிட இயலாது! அப்படி நான் போகமால் இருந்தால் என் கடந்தப் பதிவே கடைப்பதிவாக இருந்திருக்கும்! கொண்டேபுடுவாங்க(பேசி, பேசாமல்)! பாசக்கார பயபுள்ளங்க!
அதே நாள் தான் பதிவர் சந்திப்பும்! மெரீனாவில் கிட்டதட்ட அதே நேரம்! சும்மா புரோகிராம் எழுதிக்கிட்டுருந்திருப்பார் நம்ம வேதாளம் அவர வேற வம்படியா வரச்சொன்னேன்! கார்கிய பாத்து வேலாயுதம் விஷயத்த உறுதி செஞ்சுடலாம்னு ஒரு நப்பாசை வேறு! என் முதல் பதிவர் சந்திப்பு வேறு! யாரையும் நேரில் கண்டதில்லை! நீ என்ன பதிவு போட்ட அங்க போகனு நீங்க கேட்கலாம்! ஒரு வாசகனா போலமில்ல???
இப்ப புரியுதா ஏன் தில்லு முல்லு பற்றி பேசினேன் என்று! ஒரே நேரம், ஒரே மனிதன், இரண்டு இடத்திலும் இருக்க வேண்டும்! பாதி சந்திப்பில் எழுந்து வந்தால் சபை நாகரீகத்தை செருப்பால் அடித்தது போல ஆகும்! 5:15 மணிக்கு எல்லாம் மெரீனாவில் போய் அமர்ந்தாகிவிட்டது! சந்திப்பு 5:30க்கு தான்!
சந்திப்பில் பங்கு கொண்டால் நிச்சயமாக பாதியில் வரக்கூடாது வரவும் முடியாது! சந்திப்பிலே இருந்து விட்டால் நான் திரும்பி மயிலாப்பூரில் காது வைக்க முடியாது! பேசியே கொன்னுடுவாங்க! அவ்வளவு குழப்பத்திலும் பலூன் சுடும் கடைகளில் ஒரு கடையில் சுமாராக எத்தனை பலூன்கள் இருக்கு என்று எண்ணிக்கொண்டே நடந்த போது தான் அவர் என் கண்ணில் தென்பட்டார்!
30-35 வயதிருக்கலாம்! கரிய உருவம்! அதே நிறத்தில் ரவுண்ட் நெக் டீ-சர்ட், முக்கோண வடிவம் போட்டு (super man டீ-சர்ட்டில் இருக்குமே) அதில் ஆங்கில ‘சி’ அதன் கீழே “Common Man” என்று வாசகம்! பளிச்! பல்ப்! நம்ம திருமாறன் ஐயா ஆர்.கே லஷ்மணின் காமன் மேன் தானே டி.பி இல் வைச்சிருப்பார் என்று என் ஷெர்லாக் மூளை என்னை தூண்டிவிட்டது!.
அவரும் காந்தி சிலை (அது தான் சந்திப்பு நடக்கும் இடம்) இருக்கும் திசையை நோக்கியே நடந்தார்! நானும் பின்தொடர்ந்தேன்! அலைப்பேசி சிணுங்கியது (அவரோடது)! ரொம்ப நேரம் பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென உரக்க பேசத் தொடங்கினார்! ”பாரீஸ் தானே தோ கிளம்பி வரேன்”. சென்றும் விட்டார் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! (காத்து இறங்கி போச்சு)!
விடுடா! வீரனுக்கு இதெல்லாம் சகஜம் அப்படினு காந்தி பின்னாடி போய் அமர்ந்தேன்! அப்போதுதான் கவனித்தேன்! மத்திய வயதில் இருக்கும் சில கனவான்கள் அங்கு தென்பட்டனர்! பத்து பேர் கொண்ட கூட்டம் அது! பிடிச்சாச்சு டா பிளாகர்ஸ என்று என்னைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே திரும்பும் போது, ‘Excuse me’ என்றொரு குரல்! இனி கொஞ்ச நேரம் ஆங்கிலம் ஏன்னா அதுதான் நடந்தது!
Mr.X (A North Indian with luggage in his hands!): Excuse me! Do u understand English?
Me: Yes. How could I help you?
Mr.X Do u understand Hindi?
Me: Nope! Sorry.
Mr. Y (Another guy with bigger luggage than Mr.X had): Do u know any place where we can keep our luggages safely? We need to have a walk and cant carry them around!
Me: If u r looking for a cloak room, I m Sorry. I can’t help you. There is no such facility here in this place
Mr Y: Thx! We need to go to central station We have a train to catch at 8:00 PM.
My Mind voice: Do u wanna ve a walk or go to central station! Am sufficiently irritated! Don’t try more pl!
Me: Ok! U need to get to light house railway station and reach central!
Mr X: No we wanna go by bus
My Mind voice: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
Me: Then cross the road get any bus which goes to broadway u can go to central!
Mr.X & Mr.Y: Thanks!
நான்: ஹி! ஹி!
திரும்பி அந்த 10 பேர் குழுவைப் பார்த்தேன்! இன்னும் சில தலைகள் கூடி இருந்தது! ஒரு சிறிய சலசல்ப்பு! வெள்ளை சட்டையும் ஜீன்சும் அணிந்த ஒரு உருவம்! பின்னால் ஒரு கருப்பு பை!
தொடரும்!!!!!!
No comments:
Post a Comment
வாங்க பழகலாம்