தில்லு முல்லு – 1 மாதிரி இல்லாமல் இது மிகச் சிறிய வாக்கியங்களைக் கொண்ட ஒரு Bulleted Corporate Presentation போல இப்பதிவு இருக்கும்! ஏனெனில் என் வலைப் புய்ப்பம் (பூ என்பதை இப்படியும் சொல்லலாம்) கொண்டு, இங்கு வரும் ஒரு சிலரைக் கூட, ஒரே விஷயத்தை வைத்தே கொல்ல எனக்கு விருப்பமில்லை!
பின் நான் 30 அடி தூரத்தில் இருந்து கவனித்த சில விஷயங்கள் மட்டும்
- முதல் மனிதர்! வெள்ளை சட்டை (Minister cotton என்று நினைக்கிறேன்) காக்கி காட்ராய் முழுகாற்சட்டையும் அணிந்து Rimless கண்ணாடி போல இருந்தது! அவர்தான் நாட்டமை போல! சத்தியமாக ஏதாவது ஒரு MNC இல் மிகப்பெரிய பதவியில் இருக்க வேண்டும்!
- அடுத்து இன்னொரு வெள்ளை சட்டை கருப்பு பை (சலசலப்பு ஏற்பட காரணமாய் இருந்தவர்) வேற யாரு நம்ம கார்க்கி! Strangerஇல் பார்த்தது போலவே இருந்தார்! அட கூட நம்ம வேதாளம்! அவரின் கனத்தை விட அதிக கனம் கொண்ட காலனி! கடல் காற்றுக்கு அஞ்சி அவ்வளவு கனமோ?
- 30 அடி தூரத்தில் இருந்து அவ்வளவு முகங்கள் தான் பதிந்தன! என்னை கடந்து அவர்கள் கடல் நோக்கி செல்லும் போது மொத்த எண்ணிக்கை 20. ஒருவர் மட்டும் அரைக்காற்சட்டை அணிந்திருந்தார்!
- சென்று வட்டமாய் நின்றனர்! என்னைப் போல சில புது வருகைகளும் உண்டு போல் இருந்தார்கள்! ஆனால் வட்டத்தினுள் அல்லது வட்டமாக! பரஸ்பர அறிமுகங்கள்! கைக்குலுக்கல்கள்! அமரும் போதும் வட்டமாகவே (கூகுள் + தாக்கம்?) அமர்ந்தனர்!
- முதல் சத்தம் வழக்கம் போல் ’ரத்தம் ’ கார்க்கி தான் கடலலைகளுக்கு போட்டியாக கரையில் சிரிப்பலைகள்! என்னப் பேசுகிறார்கள் என்று கேட்க ஆசை!
- சிறு உட்பிரிவு நகைச்சுவைகள் முடிந்து! வேதாளம் வெளியே பறந்து வந்து தன் அலைப்ப்பேசி அழைப்பை முடித்து விட்டு அமர்தல், இரு சுண்டல் விற்கும் சிறுவர்களின் பாத்திர கனத்தை குறைக்காமல் திருப்பி அனுப்புதல், ஆகிய நிகழ்வுகளோடு ஒரு பொது நகைச்சுவையும் முடிந்தது!
- திடீரென நகைச்சுவையின் நாற்றம் என் அருகில் வீசியது, என்னவென்று பார்த்த போது நம்ம RJ மொட்ட பாஸ்கி! மாலை கடல் மணலை மகிழ்ச்சியாக்க மறுத்து தார் ரோட்டிலே கடந்து சென்றார்! அவரும் வட்டத்தை நோக்கினார்! அவரை வட்டமும் நோக்கியது! கற்றாரை கற்றாரே காமுறுவர்! பாம்பின் கால் பாம்பு அறியும்!
- மேலும் இரு உருவங்கள் வட்டத்தை நோக்கி வந்தன! முதல் வட்டத்தை தாண்டி (காலனிகளால் உருவான வட்டம்) இரண்டாம் பதிவர்கள் வட்டத்தை அடைந்தனர்! அட! அதில் ஒருவர் வேட்டி சட்டை! உடையாலும் தமிழ் பேசினார்!
- மணி 6:30: என் அலைப்பேசி சிணுங்கியது! என்னை தி-நகருக்கு அழைத்து செல்ல சில மணித்துளிகளில் ஒரு பைக் வரும்! நான் கலங்கரை விளக்கம் அருகே செல்ல வேண்டும்! அதுதான் சாராம்சம்
- மன கனத்தோடு வயிறு நிரப்ப கிளம்பினேன்! ரோந்து helicopter தன் இருப்பை உறுதி செய்தது ஏதோ சொன்னது போல் இருந்தது! என்னவென்று கேட்டேன்! அது கூறியது இதுதான் என்று என் பக்கத்தில் இருந்த ராட்டினம் பதில் சொன்னது!
பதில் இதுதான்
“செவிக்கு உணவில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்”
Damn good! But sorry. The plans were made much earlier :(
ReplyDeleteநன்று !!!! :) :)
ReplyDelete