எல்லோருக்கும் ஆசை ஒன்று இருக்கும்! அதாவது ஆசை என்று ஒன்று இருக்கும் அது அரசியல்வாதிகளின் கொள்கைப் போல பல வகைப்படும்!
அப்படித்தான் வந்தது இந்த ஆசைகள்! இரவு 1:00 A.M (technicalலா அதிகாலை)! Harry Potter படம் பார்க்க வேண்டும் அப்புறம் சாவு என்பதை பார்க்க வேண்டும்! முதலாம் ஆசையை பேஸ்புக்கிலும், இரண்டாம் ஆசையை டிவிட்டரிலும் பதிய வேண்டும் என் மூளையின் விளம்பரப் பிரிவு ஆசைப்பட்டது!
அதெல்லாம் வேறு இருக்கா அதுக்கு பிரிவுகள் வேறு இருக்கா என குதர்க்கம் செய்யாது பதிவை திகிலோடு படியுங்கள்! ஓ! அதைக் கூற மறந்து விட்டேன் இது ஒரு கருமையான (அதாங்க dark) பதிவு! ஏற்கனவே டிவிட்டரில் டீவிட்டுக்களாகவும், பேஸ்புக்கில் நோட்டாகவும் வெளியிட்டு ரீடுவீட்டோ, கமெண்ட்ஸோ இல்லாமல் flop ஆகி பாலா சேதுவை வெளியிட்டது போல் மறுவெளியீடு செய்கிறேன்.
உட்பொருளுக்கு போகுமுன் ஒரு சிறிய குறிப்பு. பசி, தீமை இந்த இரண்டையும் உலகு கடத்த வேண்டும் என்பது என் பேராசை. அதன் முதல் படியாக எனக்குள் இருக்கும் தீமையை துரத்துவதர்க்கு முயன்று கொண்டிருக்கிறேன்.
இனி கவிதை! இல்லை இது உரைநடை என்போர்க்கு இது உரைநடை! ஆனால் எனக்கு இது மரண சாசனம்.
தீயே உன்னால் நான் அமைவேனாயின், நான் தீமை எண்ணிய மூளை அணுக்களை முதலில் சுட்டெறி!! ஒரு வினாடியேனும் தன்னுள் தீதின்றி இருக்க ஆசை!!
நீரே பிரளயத்தில் உன்னால் நான் மூழ்குவேனாயின் என் மூச்சுக்குழலில் "Lake Vanda" நீரை செலுத்து! என் சாவாவது சுத்தமாய் இருக்கட்டும்!
காற்றே என்னை காலனிடம் நீயே கொண்டு செல்வாயின் நான் நிலையானவன் என்ற அகங்காரத்தின் ஒப்பாரியை சிறிது நேரம் நான் கேட்கும் படி ஒலி பரப்பு!
வானமே நீயே என் வாழ்வை வீழ்த்துபவனாயின் உன் மின்னலை கொண்டு மாலத்திலிருந்து மீட்டெடுத்து போ! என் முற்றுப்புள்ளி வலி அல்ல ஒளி!
பூகம்பத்தால் பூவுலகை விட்டு புறப்பட்டால், பூமியே என் பூதவுடலை நீ புறந்தள்ளாமல் புழுக்களுக்கு பிண்டமாக இட்டு விடு! அசைவம் புழுக்களுக்காக மட்டும்தான்!
பி.கு: இறப்பதற்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் எனக்கு பிடித்தவை இவ்வைந்தும்

No comments:
Post a Comment
வாங்க பழகலாம்