Wednesday, December 28, 2011

ரீபோக்கும் பூமரும்


1
"அப்பா அந்த சூயிங்கம் வேணும்!"
"அது உடம்புக்கு கெடுதல் டா செல்லம்!"
"அதெல்லாம் இல்லை! தோனியே அந்த சூயிங்கம் போட்ட அப்புறம் தான் சிக்சரே அடிக்கிறார்! எனக்கு வேணும்!"
"அதெல்லாம் விளம்பரம்டா கண்ணா. சும்மா! அதை எல்லாம் நம்பக்கூடாது!
ஹீம்! ஹீம்! பபிள்கம் வேணும்!"
அடி! வாயை மூடு!"
2
"மச்சி! நம்ம செட்டில் முதல் முதலா ஆயிரக்கணக்கில் செலவு பண்ணி ஷீ வாங்கி இருக்க கலக்கல் மச்சி!"
"மக்களின் வாழ்க்கை தரம் உசந்துடுச்சுடா! சும்மாவா சொன்னாங்க நுகர்வோர்களின் வாங்கும் திறன் அதிகமாயிடுச்சுனு!"
"டேய்! எத்தனை தடவை சொல்லியிருக்கேன் குப்பையை தூக்கி ஜன்னல் வழியா கீழப் போடேதுன்னு!"
"மூவாயிரம் ரூவாய்க்கு ஷீ வாங்கி இருக்கேன்! இந்த பொட்டிய தூக்கி கீழே விசிறலேன்னா அப்புறம் என்னடா கெத்து! சும்மா இரு! குப்பை தானே!"
"சரி! நாம படத்துக்கு போலாம் வா! டைம் ஆயிடுச்சு!
புது ஷீ! புது படம் கலக்குற மச்சி பிரமாதம்!"
3
"என்னாச்சுடி புள்ளைக்கு! ப்ளாஸ்திரி எல்லாம் போட்டு இருக்கு?
வெளியதாங்க விளையாடிட்டு இருந்தான். தீடீர்ன்னு சத்தம் போய் பார்த்தா கீழே விழுந்து கிடக்கான்!"
"எப்படி திடீர்னு விழுவான்? அவன் என்ன நடக்கத் தெரியாத குழந்தையா?
எவனோ ஷீ பொட்டிய தூக்கி வீசியிருக்கான்! அதுல இருந்த பிளாஸ்டிக் கவர் மேல காலை வைச்சு வழுக்கி விழுந்துருக்காங்க"
"சே! அறிவு கெட்ட ஜென்மங்க! ஏன் கண்ணா ரொம்ப வலிக்குதா?"
"ஆமாப்பா! ஹீம் ஹீம்!"
"சரி வா! வெளிய போலாம்! அப்பா உனக்கு சூயிங்கம் வாங்கித் தரேன்!"
4
"செம படம் இல்ல மச்சி!"
"ஆமாடா!"
"வா அப்படியே பீச்சுக்கு போயிட்டு சாப்பாட்ட முடிச்சுட்டு ரூமுக்கு போலாம்!"
"சே! பாக்கெட்டுல எவ்வளவு குப்பை! பார்க்கிங் டிக்கெட்! சினிமா டிக்கெட்!"
"டேய் எத்தனை தடவை சொல்றது குப்பையை எல்லாம் கண்ட இடத்துல விட்டெறியாதன்னு!"
"போடா திருத்த வந்துட்டான் விவேகானந்தன்."
5
"ஹய்யா! பபிள்கம் சூப்பரா இருக்குப்பா!"
"கால் ரொம்ப வலிக்குதாப்பா!"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை! இங்க பாக்குரியா நான் எவ்வளவு பெரிய முட்டை விடுறேன்னு!"
"ஹய்யோ! எவ்வளவு பெரிசு! சரி விளையாடினது போதும்! பபிள்கம்மை துப்பிட்டு வா! நாம ஜாக்கிசான் கார்ட்டூன் பாக்கப் போகலாம்!"
"இன்னும் கொஞ்ச நேரம்பா! ப்ளீஸ்!"
"வேணாம்டா சொன்னா கேக்கனும் இல்ல! அப்பதான் அப்பா நாளைக்கும் வாங்கித் தருவேன்!"
"பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூ பூச்ச்ச்ச்ச்! ஹய்யா எவ்வளவு தூரம் போச்சு பாத்தியா?"
"அட! ஆமாம்! நாளைக்கு இதை விட தூரமா துப்பலாம் வா!"
6
"சே! பீச்சுக்கு வாலைன்டேன்ஸ் டே அன்னிக்கு போகவே கூடாதுடா!"
"கரெக்டா சொன்னே! நான் உன் மூஞ்சியபாத்துட்டு! நீ என் மூஞ்சியபாத்துட்டு! எத்தனை நாளைக்கு தான் இப்படியே…."
பச்சக் பச்சக் பச்சக்
"என்னடா குனிஞ்சு பாக்குற!"
"இல்ல! என்னமோ ஷீவில் என்னவோ ஒட்டினா மாதிரி இருந்துச்சு! இருட்டுல வேற என்னன்னு தெரியல! லைட்ட போடு"
"ஒரு ஷீவை வாங்கிட்டு இன்னும் பேங்க் லாக்கரில் தான் வைக்கல!
காலையில் எழுந்து பாத்துப்போம் விடு!"
"டேய்ய்ய்ய்! நான் நேத்து நைட்டே சொன்னேன் இல்ல! இங்கப் பாரு எவனோ சூயிங்கம்மை தின்னுட்டு படியில துப்பி இருக்கான்! அதைத் தான் மிதிச்சு இருக்கேன்!"
"அச்சோ! புது ஷூவிலா டா?"
"அடப் போடா! இப்போ காஞ்சு வேற போச்சு! சுரண்டி எடுத்தா பேஸ் வேற நாஸ்தி ஆயிடும்! சே!"

7
"என்னடா பழக்கம் இது? எப்பப் பாத்தாலும் எல்லாத்தையும் தூரத்துல துப்பிகிட்டு?"
"அடப் போம்மா! இதுக்கே இப்படி சொல்ற! நேத்து நான் பபிள் கம்மை எவ்ளோஓஓ தூரம் துப்பினேன் தெரியுமா அப்பாகிட்ட கேட்டு பாரு!
என்னங்க இது?"
"அட விடுடி! ஒரு ரூபாயுக்கு கம் வாங்கி இருக்கேன்! அப்படி துப்பலைன்னா என்ன சந்தோசம்! சும்மா இரு! குப்பை தானே….."

6 comments:

  1. என்ன தான் சொல்ல வர்ற? ஒண்ணுமே புரியலையே... இதுதான் பின்னவீனத்துவமா?

    ReplyDelete
  2. hey hey me the first....me the firstnu pottutta vera ethuvum poda kudathaam...

    ReplyDelete
  3. @வேதாளம் ஹி ஹி ஹி! குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடலைன்னா இப்படி ஏதாவது ஏடாகூடமா நடக்கும்! எப்படி நம்ம மாரல்???
    @சிங்கம் :)

    ReplyDelete
  4. திருமாறன்.திDecember 28, 2011 at 3:13 PM

    சூப்பர் நட்டு..வெறும் வசனங்களை வைத்தே கோர்வையாய் ஒரு கதை. சம்பவங்களை முடிச்சு போட்டு நல்லா எழுதியிருக்கீங்க...

    ReplyDelete
  5. கதையோட்டம் புதுமை, அதுல ஒரு நல்ல கருத்தும் சொல்லியிருக்கீங்க! வெறும் வசனங்களிலே கதை சொல்லியதால் இதைச் சிறுகதை வகையில் சேர்க்காமல் நாடகம் வகையில் சேர்க்கலாம்!!! உங்கள் நகைச்சுவையுணர்வும் ஆங்காங்கே மிளிர்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete

வாங்க பழகலாம்