அரசு அலுவலகங்களில் அனைத்து ஊழியர்களும் வந்து அமரும் நேரமான நண்பகல் 12 மணியை எனது செல்போன் காட்டி கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன் நள்ளிரவில் இரண்டு நிமிடங்கள் பெய்த மழையின் எந்த தடயமும் இல்லாத காரணத்தால் சூரியன் சுள்ளென சுட்டுகொண்டிருந்தான்.
எழுவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது என மகிழ்ந்து தூக்கத்துக்கு ப்ரோப்பஸ் செய்ய கடவுள் அதை டிஸ்போஸ் செய்துவிட்டார். மேனஜர் அழைக்கிறார் என்றது கைப்பேசி.
"ஹலோ"
"ஹலோ. குட் மார்னிங்"
"குட்மார்னிங் ௴௴௴௴"
"தூங்கிட்டு இருந்தியா ௳௳௳௳"
"இல்லை ௴௴௴௴. சொல்லுங்க" காலையில் 5 மணிக்கு வந்து படுத்தவன் இந்நேரத்துக்கு கபடியா ஆடிட்டு இருப்பேன்? இருந்தாலும் இல்லேன்னு தான் சொல்லனும்
"நேத்து கேன்சல் ஆன கால் இன்னிக்கு நம்ம நேரம் மதியம்
3 மணிக்கு வைச்சிருக்காங்க. இப்பதான் மெயில் பார்த்தேன். சீக்கிரம் லாகின் பண்ணிடு."
"ஓ! அப்படியா? ஓ.கே ௴௴௴௴"
"சரி சாயந்திரம் பார்ப்போம்."
"அப்போ மதியம் நீங்க வரலையா?"
"Come on. It is time for you to take the ownership. You can do this. You are getting a chance to prove your leadership skills. This will be a highlight in APPRAISAL falling this month. ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ. ZYXWVUTSRQPONMLKJIHGFEDCBA.Who let the dogs out. Whoooo? whoo? whoo? whooo? India loses the semifinal berth even after beating SA."
"ஓ சரி! அப்போ நானே பாத்துக்கிறேன். Bye." Appraisal என்ற வார்த்தைக்கு பிறகு அவர் எது சொன்னால்தான் என்ன? இம்முறை வரும் சம்பள ஏற்றத்தை வைத்து நெடுநாள் கனவான S2விற்கான EMI ஆக மாற்றிவிடுவதாய் என் மேல் நானே என்னிடம் சத்தியம் செய்திருந்தேன்.
எழுந்தேன். பல்துலக்கும் ப்ரஷ்ஷை எடுத்தேன். பெரிய கரும்பை ஒரே கடியில் உரித்தெடுக்கும் வலிமையுள்ள பற்களை தர வல்ல பற்பசையை பர்ஷ்ஷின் மேல் பிறந்த குழந்தையின் விரல்நகம் அகலமும், கொசுவின் உயரமும் அளவுக்கு ப்ரஷ்ஷின் மேல் வைத்தேன்.
அப்போது கருப்பன் உச்சக் குரலில் சொன்ன வார்த்தைகள் "வவ்வ்வ்வ்வ்வ்வ்! வவ்! வவ்வ்வ்வ்வ்வ்! வவ்வ்வ்வ்வ்வ்வ்"
இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் என்னவென்றால் "யாரோ வீட்டுக் கதவின் வெளிப்புறத்தில் நின்று, மின்சார தொடர்பு இல்லாத அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தி, எந்த சத்தமும் எழாததை கேட்டு உன் பெயரை கூப்பிட்டுகிறார் . நீ இப்போது எழுந்து செல்லவில்லையெனில் நான் இந்த வாக்கியத்தை இதே குரலில் தொடர்ந்து சொல்லிகொண்டே இருப்பேன்." என்பதே
முப்பது நொடிகள் கடந்த பின், அந்த வாக்கியம் நான்கு முறைகள் குலைக்கப்பட்ட பின், வராண்டாவை கடந்து கதவுக்கு சென்றபின், கதவை திறந்த பின், வந்தவர் கொரியர் கொடுக்க வந்திருக்கிறார் என நான் அறிந்த பின் என்னை பார்த்து அந்த கேள்வியை அவர் கேட்டார்
"என்ன சார் தாடியெல்லாம் வைச்சுட்டிங்க?"
கையில் இருந்த ப்ரஷ்ஷை வாயில் வைத்து, அவர் தந்த ஜாமட்ரி பாக்ஸ் அளவுள்ள எந்திரத்தில், பத்து துடைப்பக் குச்சிகள் பருமனுள்ள ஒரு பேனா போன்ற பொருளால் என் பேரை சிகப்பு கொண்டையும் வெள்ளை உடலும் கொண்ட சேவல் கிறுக்கினால் எப்படி எழுதுமோ அதை விட அழகாக எழுதி, அவர் தந்த தபால் உறையை பற்பசையில் படாது வாங்கி, இயந்திரத்தையும், பேனாவையும் திருப்பி கொடுத்து, ஒரு கையில் தபாலும், மறுகையில் ப்ரஷ்ஷீம் வைத்துகொண்டு :)உடன் நான் சொன்ன பதில்
"சும்மாதாண்ணா."
உறையை திறந்து வரும் வழியில் இருந்த குப்பை கொண்ட ப்ளாஸ்டிக் கவரில் இட்டு பல்லை தேய்த்து கொண்டே படித்த கடிதத்தின் கரு மிக எளிமையானது.
அந்த நேரத்தில் ஒரு ஷேர் சுமார் 265 ரூபாய்க்கு பங்குசந்தையில் வாங்கி விற்றுகொண்டிருக்கும் ஏர்டெல்லின் பிராட்பேண்ட் இணைப்பை தொடர்ந்து நான் தொடர்ந்து வைத்து கொள்ள வேண்டுமானால் மேலும் ஐநூஊஊஊஊஊறு ரூபாய் மாத வாடகையில் சேர்த்து கொடுக்க வேண்டும். அதற்கு அவர்கள் கூடுதலாக 2 ஜி.பி அதிவேக இணைப்பாக தருவார்கள். இதை விலாவாரியாக எறும்பு மொய்க்கும் அளவுக்கு இனிப்பான ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.
இப்போது வாயில் நுரை தள்ள தொடங்கியது. பற்பசையின் விளைவு. அவ்வளவே.
"தம்பி. ஒரு நிமிஷம் அப்படியே மேல வாயேன்." வாயில் பிரஷ்ஷீம், கையில் கடித சகிதமாக மேலே சென்றேன். தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் போன முறை அழைத்த போது வாயில் இட்ட சோற்றை மென்று கொண்டே ஓடிய வரலாறெல்லாம் எனக்கு இருக்கிறது.
"இப்பதான் எழுந்தியா? பாவம் நீயும் என்ன பண்ணுவ. நேரங்கெட்ட நேரத்துல வேலை. காலையில வரும் போதே பார்த்தேன். சரி தூங்க போறவனை தொந்தரவு பண்ண வேண்டாம்னு அப்பவே கூப்பிடலை. வீட்டு வரி ஏறிபோச்சு. தண்ணீர் வரி ஏத்திட்டாங்க. இந்த மாசத்துலேந்து வாடகை கொடுக்கும் போது 500 ரூபாய் சேர்த்து கொடுத்துடு. அஆஇஈஉஊஎஏஐஒஓஒள கஙசஞடணதநபமயரலவழளறன ஃ அட்றா அட்றா நாக்க முக்கா நாக்க முக்கா. காவிரி நீர் பங்கீட்டில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு."
"சரிங்க".
கீழே வந்து பல் தேய்த்தலை முடித்த பின். துண்டை எடுத்து குளிக்க செல்லலாம் என்ற போது மறுபடியும் கருப்பன் பேசத் தொடங்கினான். "வவ்வ்வ்வ் ஊஊஊஊஊ"
//பிறந்த குழந்தையின் விரல்நகம் அகலமும், கொசுவின் உயரமும் அளவுக்கு// செம.. எப்படி இப்படி???
ReplyDelete-சந்து என்கிற லாஓசி
வருகைக்கு நன்றி. :) //எப்படி இப்படி//? அதெல்லாம் அப்படித்தான். :)
DeleteAppo S2..................... :)
ReplyDeleteவட போச்சே! :)
Delete:)))))
ReplyDeleteஒரு யுனிக் நடைப்பா உன்னுது..சிலர் பெரிய சொற்றொடர்கள் எழுதினால் சோர்வா இருக்கும். ஆனா இது அப்படி இல்லை..அப்டியே அருவியாட்டும் கொட்டுது வார்த்தைகள்.
ReplyDeleteஒன்னுமே படிக்காம போய் 40 பக்க விடைத்தாளில் எதையோ எழுதிவிட்டு திரும்பி, ரஸ்னா குடித்து வீடு திரும்பியதில் தொடங்கிய பயிற்சி ஐயா இது. :)
Deleteயோவ்.. நீரு விட்ட வார்னிங்க நினைச்சி பயந்து வந்து படிச்சி பாத்தா..,
ReplyDeleteஎன்னா வாழ்க்கையா இது.. காலையிலே அஞ்சு மணிக்கு தூக்கமா.., அரசு அலுவலக ஊழியர்ன்னு சொல்ற அரசாங்க அடிமைகள் ஆக்டிவா வேலைபாக்குற நேரமாச்சே....!! (அப்பே ஆபிஸ்ல என்னா பண்றீங்கன்னு கேக்க கூடாது..)
வருசத்துக்கு நூத்தி சில்லறை வருமான ஏற்றம் எங்கே... மாசாமாசம் வருமான ஏற்றம் பெறும் ஐடி மக்கள் எங்கே..!! அப்ரைசல் ஐடிக்கே..!!
"அழைத்த போது வாயில் இட்ட சோற்றை மென்று கொண்டே ஓடிய வரலாறெல்லாம் எனக்கு இருக்கிறது".. ஹாஹா.. .. கஷ்டத்தோடு இது ஒரு கஷ்டம்..!! சூப்பரு..!!
இனி DM ,, link... வராதுன்னு நம்புறேன்..! ;-))
அரசு ஊழியர்களின் பெரும்பாலானோர் சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு வருவதில்லை என்ற ஆற்றாமையையே அவ்வாறு பகடியாக குறிப்பிட்டது. :)
Deleteநீயாச்சும் உருப்படுறியே... சந்தோசமா இருக்குடா! என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteபூவோட சேர்ந்த நாரும் நாறியது போல! :)
Deleteவழக்கம்போல உவமைகள் மிக அருமை. அப்படியே நடந்தவற்றை கற்பனையில் ஓட்டிப்பார்க்கும் அளவுக்கு விளக்கமான விவரிப்புகள் அருமை. இயலாமையைக்கூட நகைச்சுவையாய்ச் சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. :)))
ReplyDeleteநன்றி நண்பா! :)
Deleteஅஹஹ்ஹஹ. அருமை அருமை...
ReplyDeleteLol! Super fun.
ReplyDeleteவவ்வ்வ்வ் ஊஊஊஊஊ......ஊஊஊஊஊஊ
ReplyDeleteநான் அக்டோபர் மாசம் வேற வேலைல பிசியா இருந்ததால மிஸ் பண்ணிட்டேன்.. ரணகளம்..
ReplyDeleteஇன்னும் கொஞ்சம் நீட்டி, ஹைக்க வீட்டு ஓனரும் இன்னிம் சிலரும் பிரிச்சிக்கிட்டாங்கன்னு முடிசிருந்தா க்ளிஷேவா இருந்தாலும், ஃபீல் குட் மூவியாட்டம் ஜாலியா போயிருப்போம்..
நாம என்ன பின்நவீன கவிதையா எழுதறோம்? முடிவ வாசகர்கள்கிட்ட விடுறதுக்கு