Thursday, October 27, 2011

ஏழாம் அறிவுசூர்யாவின் நடிப்பில் சிகப்பு பூதம் தயாரிப்பில் மெமண்டோ சே கஜினி புகழ் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகி மொக்கை, Documentary என்றெல்லாம் பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கும் திரைக்காவியம்.

படத்தின் பெயர் நியாயமாக போதி தர்மர் என்று தான் இருந்திருக்க வேண்டும். இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை அவரின் பெயர் படத்தில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு மறந்த தமிழர்களில் ஒருவன். அவரைப் பற்றி ஒன்றும் தெரியாததுதான் அதற்காக நஞ்சுணவை வேண்டுமென்றே உண்டு இறப்பதெல்லாம் காதில் பூக்கடை.

சூர்யா சொல்லவே தேவையில்லை வயிற்றில் படிக்கட்டோடு மிகவும் மெனக்கட்டிருக்கிறார். பெரிதாக நடிக்கத் தேவையில்லாத கதாபாத்திரம். சிரித்தால் அழகாக இருக்கிறார் என்கிற ஒரே காரணத்துக்காக காதல் தோல்வி பாட்டிலும் அந்த ஓரச் சிரிப்பு தேவையா?

சுருதி! வாவ் என போஸ்டரில் பார்த்து போனால் அந்த அளவு ஒன்றும் இல்லை! பாடல் காட்சிகளில் எப்படி கேமராவை பார்க்க வேண்டுமென்று அப்பாவிடம் கேட்டுக்க செல்லம்.

வில்லன் அந்த சீனப் பையன் கண்ணிலேயே நிற்கிறான். தமிழ் சினிமாவில் இனி அடிக்கடி பார்க்கலாம் என நினைக்கிறேன்.

இனி படம். சீன ***(சென்சார் கட் கவர்மெண்ட் என்று சொல்லக்கூடாதாம்) இந்தியாவில் ஒரு பயோ யுத்ததை தொடங்கினால் சுருதியின் ஆராய்ச்சியால் அது சூர்யாவின் உதவி கொண்டு முறியடிக்கப்படும் அதனால் யுத்தமும் தொடங்க வேண்டும், இவர்கள் இருவரும் இறக்க வேண்டும். இதான் கரு. இந்தியாவில் போதி தர்மரால் மட்டுமே முறியடிக்கப்படும் வைரசை பரப்ப முயலுகிறான் வில்லன். கொய்யால பஞ்சாப் கூட இந்தியாவில் தானே இருக்கு வைரச அங்கு பரப்பிவிட்டு இங்கு வந்து சுருதிய கொலை செய்யலாம் இல்ல.

ஆனால் நாம் எப்படி நமது கலாசாரத்தையும், வாழ்வியலையும் மறந்து அன்னிய மொழிக்கும், கலாசரத்துக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என சுருதி கதாபாத்திரம் மூலம் நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார் இயக்குனர். அதுவும் தமிழ் புத்தகத்தில் இருப்பதை வைத்துக்கொண்டெல்லாம் ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது என சொல்வது நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

படத்தின் மிகப்பெரிய + & - பட தொடக்கத்தில் போதி தர்மனைப் பற்றிய documentary. ஏனுங்க நாங்க இசுக்கூலுக்கு வந்திருக்கோமா இல்ல தியேட்டருக்கு வந்திருக்கோமா? போதி தர்மரைப் பற்றி சொல்ல வேண்டினால் அழகாக படத்தின் இடைச்செருகலாக அவ்வப்போது வைத்திருந்தால். இரண்டு காலத்துக்கும் போய்விட்டு வந்தது போல உணர்விருந்திருக்கும்.

ஏம்பா ஹாரிசு, போதி தர்மாவை முதலில் காட்டும் போதும் அவர் திரும்பி வரும் போதும் ஒரு வாத்தியம் வாசிக்கப்படுகிறதே என்னப்பா அது! வேற வாத்தியக் கருவியே கிடைக்கலையா இல்ல electrical instruments மட்டுந்தான் பயன்படுத்துவிங்களா (இப்பத் தெரியுதா இளையராஜா அருமை).

இலங்கை கொலைகளத்துக்குப் பிறகு அதைப் பற்றி தைரியமாக ஒரு வணிகப்படத்தில் வசனங்கள் வைத்தது பாராட்டதக்கது. ஆனா அந்த “திருப்பி அடிக்க வேண்டும்” தான் பயமா இருக்கு. நல்ல வேளை சூர்யா என்பதால் பெரிதாக ரீச்சாகவில்லை. முக்கியமா யாழ்பாண நூலக வசனமும் நல்ல விசயம். தமிழ் பேசுவதால் தமிழன் என்ற கர்வம் வந்தால் அது இன கர்வம். அதுவே அறிவைப் பரப்பி, அன்பைப் பரப்பி வந்தால் தான் அது பெருமை என்றும் சொல்லி இருக்கலாம்.

ஒன்று மட்டும் உண்மை தமிழ் உணர்வை வியாபாரம் ஆக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு மத்தியில் படம் வந்திருந்தாலும், நிஜமாக தமிழர் என்ற உணர்வே இல்லாமல் நான் (எழுத்துப் பிழை அல்ல நான் தான்) வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்று சொல்லிய படம். என்று வரலாற்றை வைத்துக் கொண்டு நாம் நம் கால்களால் நிற்க முயற்சிக்கிறோமோ அன்று சொல்லலாம் நான் தமிழன் என்று. தமிழால் கர்வம் என்று.

மற்றொரு பாராட்டப் பட வேண்டிய விசயம் காமெடி. அப்படியென்று ஒன்று தனியாக படத்தில் கிடையாது (தனி track வைத்து சொதப்பாமல் இருந்த இயக்குனருக்கு ஒரு நன்றி).

படத்தின் மேலும் ஒரு அழகிய ஈர்ப்பு “நோக்கு வர்மம்”. அட இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு செய்யவைக்க முடியும் என்ற தியரி மிக எளிதாக சூப்பர் ஹீரோவையும் சூப்பர் வில்லனையும் உருவாக்க முடிகிறது. அந்தப் காவல் நிலையத்தில் வில்லன் நுழையும் காட்சிகள் Terminator என எளிதாக பத்து வயது குழந்தைக் கூட சொல்லிவிடும். முருகதாஸ் நீங்க கொஞ்சமாவது சொந்தமா யோசிங்க.

அழகான ஒளிப்பதிவு. சீனத்துக் காட்சிகள் அவ்வளவு அழகு.எடிட்டிங் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு படத்தின் இறுதி காட்சி பார்த்த பின் நான் சொன்னது “செம எடிட்டிங்”. கலக்கல்.

படத்தின் மிகப்பெரிய மைனசான பாடல்களை சரியான இடத்தில் செருகி இருந்திருந்தால், சூர்யா சுருதி காதல் காட்சிகளையும் சுவாரசியமாக கொண்டு சென்றிருந்தால், ஏழாம் அறிவு நிஜமாகவே ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படமே.

பி.கு: இந்தப் பதிவு “ஏழாம் அறிவு எனக்கு ஏன் பிடித்தது?” என்றே வைத்திருந்தேன். ஆனால் விமர்சனத்தின் நடுநிலையைக் கெடுத்து விடும் என்பதால் வெறும் ஏழாம் அறிவு.

6 comments:

 1. I expected u to have come back with this feedback!! Let me try my chance n see how far the abovestated holds good.

  ReplyDelete
 2. நல்லா இருக்கு டா நடராஜா! இருந்தாலும் எனக்கு படம் பிடிக்கல...

  ReplyDelete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம். இயக்குனர் காப்பியடிக்கிறதுன்னு முடிவு பண்ணியதற்கு பின், திருந்த அடிக்க வேண்டாமா? :) முருகதாஸ், இயக்குனர் சேரன் கும்பலோடு சுற்றுபவர். அதனால் தான் என்னவோ தமிழ் உணர்ச்சியை காண்பித்துவிட்டு திரைக்கதையில் கோட்டை விட்டுடாரு போல. இந்த மாதிரியான கதையை எல்லாம் கவித்துவமாக படம் எடுக்க வேண்டும். அதற்கு சொந்த கற்பனை வளமும் பொறுமையும் நிதானமும் அவசியம்.

  இயக்குனர் போதிதர்மரை பற்றி படித்ததில் இருந்து அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று ஓர் ஆர்வத்தில் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த அவசரத்தில் நேர்த்தி குறைந்த திரைக்கதையை அமைத்துவிட்டார்.

  படங்களுக்கு பாடல்கள் பெரும் குறை. அவை திரைக்கதையில் ஒரு தொய்வை உண்டுபண்ணிவிடும். பாடல்களும், பக்க நகைச்சுவைகளும் இல்லாமல் இருந்தால் பல படங்கள் விருவிருப்பாக இருக்கும்.

  ReplyDelete
 5. @sup: worth a watch! :)
  @வேதாளம்: அட விடு மச்சி! எல்லாருக்கும் ஒரே சுவை இருந்துட்டா அப்புறம் என்ன?
  @புலவர் தருமி: அதாண்ணே! ஆனா அழகா சொல்லவேண்டிய கதை சொதப்பிட்டாருனு நினைக்கும் போது தான் வருத்தமா இருக்கு
  @anon: அண்ணே மரியாதை குறைவான வார்த்தைகள் வேண்டாமே

  ReplyDelete
 6. Good, you changed the title. Nice review!
  amas32

  ReplyDelete

வாங்க பழகலாம்